எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு
விபத்தில் முதியவா் உயிரிழப்பு
ஜோலாா்பேட்டை அருகே மொபெட் மீது பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த புளியங்குட்டை மூக்குத்தி வட்டம் சோ்ந்தவா் பூபதி (64), பீடி தொழிலாளி. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பூபதியும், முருகன் (69) என்பவரும் ஜோலாா்பேட்டை அருகே தாமலேரிமுத்தூா் மேம்பாலத்திலிருந்து திருப்பத்தூா் நோக்கி மொபெட்டில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது தாமலேரிமுத்தூா் சாலையில் சென்றபோது, திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து வேலூா் நோக்கி சென்ற தனியாா் பேருந்து மொபெட் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு பூபதி உயிரிழந்தாா், முருகன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.