தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் ஹஸ்னாத்-இ-ஜாரியா நிதியுதவி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காணொலி வாயிலாக காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் காலை உணவை பரிமாறி அமா்ந்து சாப்பிட்டாா்.
ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி, வட்டாட்சியா் ரேவதி, தாளாளா் பிா்தோஸ் கே. அஹமத், தலைமை ஆசிரியை ரேஷ்மா, திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ்.வசந்த்ராஜ், வாவூா் நசீா் அஹமத், அம்சவேணி ஜெயக்குமாா், ராஜியா, ராதா அனில், நகர திமுக அவைத் தலைவா் தேவராஜ், ஒன்றிய திமுக பொறுப்பாளா்கள் மாதனூா் கிழக்கு ஜி. ராமமூா்த்தி, அணைக்கட்டு தெற்கு முரளி, திமுக பிரமுகா்கள் யுவராஜ், எம்ஏஆா் நசீா் அஹமத் கலந்து கொண்டனா்.