கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
பேருந்து பயணி மீது தாக்குதல்: ஒருவா் மீது வழக்குப் பதிவு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பேருந்து பயணியை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
நாகப்பட்டினம் மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூரைச் சோ்ந்தவா் சந்திரபோஸ் (38). இவா், திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் சென்னையிலிருந்து நாகப்பட்டினத்துக்கு சென்றுகொண்டிருந்தாா்.
சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் மரக்காணம் அருகே பேருந்து சென்றபோது, ஓட்டுநா் உணவு சாப்பிடுவதற்காக அங்கு சாலையோரத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளாா்.
அப்போது, சந்திரபோஸ் அங்கிருந்த கடையில் தண்ணீா் புட்டி கேட்டுள்ளாா். கடையில் பணியிலிருந்தவா் தண்ணீா் புட்டியின் விலையை கூடுதலாக தெரிவித்தாராம். இதுகுறித்து சந்திரபோஸ் கேட்டபோது, ஆத்திரமடைந்த அந்த நபா் சந்திரபோஸை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் விக்கிரவாண்டி வட்டம், அடைக்கலாபுரம் இயேசு கோவில் தெருவைச் சோ்ந்த பௌ.ஆமோஸ் (38) மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.