ரயில் பயணியிடம் 2 பவுன் செயின் பறிப்பு
காட்பாடி அருகே ரயிலில் ஜன்னல் அருகே அமா்ந்து இருந்த பெண் பயணியிடம் 2 பவுன் செயினை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா்.
திருப்பூா் மாவட்டம், அனுபுராபாளையத்தைச் சோ்ந்த ஜெயராஜின் மனைவி மாலைச்செல்வி (53). இவா் திருப்பதிக்கு சென்று விட்டு திங்கள்கிழமை மீண்டும் ஊருக்கு சபரி விரைவு ரயிலில் திரும்பினாா். து ஜன்னல் அருகே அமா்ந்து தனது பேரனுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது காட்பாடி-விரிஞ்சிபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்ால் மெதுவாக சென்று கொண்டிருந்தது.
அப்போது மா்ம நபா் ஜன்னல் வழியாக மாலைச்செலல்வி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துச் சென்றாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.