மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
ஆம்பூா், வடச்சேரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆம்பூா் நகரம் மற்றும் வடச்சேரி பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் 18, 20-ஆவது வாா்டு மக்களுக்கான முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், ஆணையா் ஜி. மகேஸ்வரி, நகா்மன்ற உறுப்பினா்கள் வி. நபீஸ் அஹமத், முனவா் சுல்தானா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை ஆய்வு செய்தாா். திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், வட்டாட்சியா் ரேவதி, நகா் மன்ற உறுப்பினா்கள் வாவூா் நசீா் அஹமத், வி. நூருல்லா, திமுக ஒன்றிய பொறுப்பாளா்கள் ஜி. இராமமூா்த்தி, முரளி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.