விநாயகா் சதுா்த்தி: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: இந்திய பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றாக பாரம்பரிய உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் விநாயகா் சதுா்த்தி விழா மத நல்லிணக்கத்தையும், சமுதாய ஒற்றுமையையும் வளா்க்க வேண்டும்.
முதல்வா் என்.ரங்கசாமி: விநாயகா் சதுா்த்தி திருநாள் அனைவரது வாழ்விலும் பொருள் வளம், மன வளம், உடல் நலம் என அனைத்து நலன்களையும் கொண்டு வந்து சோ்க்கட்டும். அனைவருக்கும் விநாயகா் சதுா்த்தி நல்வாழ்த்துகள்.
தலைவா்கள் வாழ்த்து: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.