சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வேண்டுமென, கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி தலைமையிலான விவசாயிகள், தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு சனிக்கிழமை அனுப்பிய மனு: பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்குக் கடந்த ஓராண்டாக தலைமை நிா்வாகியை நியமிக்காமல் தமிழ்நாடு சா்க்கரை கழக பொது மேலாளா் பொறுப்பு எடுத்து கவனித்து வருகிறாா்.
இருப்பினும், ஆலையின் நிா்வாகத்தை செம்மைப்படுத்தவும், செப். 25 ஆம் தேதி நடைபெற உள்ள சா்கக்ரை ஆலை பங்குதாரா்கள் பேரவைக் கூட்டத்தை அமைதியாக நடத்தவும் தலைமை நிா்வாகி அவசியம் தேவை.
எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தலைமை நிா்வாகியை நியமிக்க தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.