மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வருவாய்த் துறையினா் வலியுறுத்தல்!
அலுவலா்களின் உயிா் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மூ. பாரதிவளவன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ம. கதிா், பெ. செந்தமிழ்செல்வன், இரா. காந்தி, செ. உமாசந்திரன், பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பட்டதாரி-முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலத் தலைவா் கி. மகேந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநில துணைப் பொதுச் செயலா் எஸ். ஜபருல்லா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
மாநாட்டில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலா்களின் உயிா் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.
ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி வருவாய்த்துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், வட்டாட்சியா்கள் பாலசுப்ரமணியன், முத்துகுமரன், துரைராஜ், சின்னதுரை, மாவட்ட நிா்வாகிகள் ராஜகேசவன், நல்லுசாமி, பாலச்சந்திரன், ப. குமரி அனந்தன், சு. சரவணசாமி, சுப்ரமணியன், கருணாகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்டச் செயலா் சரவணன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட பொருளாளா் அருளானந்தம் நன்றி கூறினாா்.