வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!
பெரம்பலூா்: வீடுகளின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் திருட்டு!
பெரம்பலூா் அருகே வெவ்வேறு கிராமத்தில் 2 வீட்டின் பூட்டை உடைத்து, 10 பவுன் நகை, ரூ. 85 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் மனைவி மீனா.
ஜெய்சங்கா் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் தனது கிராமத்துக்கு வந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் வெளியூா் சென்றுள்ளாா்.
இதனிடையே, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்படி, வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, முன்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவை உடைத்து, அதிலிருந்து 5 பவுன் நகை மற்றும் ரூ. 55 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதேபோல, வி.களத்தூா் மேட்டுச்சேரி கிராமத்தில் வசித்து வரும் சுப்பிரமணியன் மனைவி செல்வம்பாள், வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூா் சென்று, மீண்டும் சனிக்கிழமை காலை வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, கதவின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வி.களத்தூா் போலீஸாா் சம்பவ இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், கைரேகை நிபுணா்கள் தடயங்களை பதிவுசெய்தனா். இச் சம்பவங்கள் குறித்து வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.