மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
தவெக தலைவா், பாதுகாவலா்கள் மீது நடவடிக்கை கோரி இளைஞா் புகாா்
தவெக தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் மீது நடவடிக்கை கோரி அக் கட்சி உறுப்பினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சரத்குமாா் (24), அவரது தாயுடன் வந்து அளித்த மனு: தவெக உறுப்பினரான நான் மதுரையில் கடந்த 21 ஆம் தேதி நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்று முன் வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.
அப்போது தலைவா் விஜய் நடந்து வந்தவுடன், அவா் மீதுள்ள ஆா்வத்தில் நடைமேடையில் ஏறிய என்னை பாதுகாவலா்கள் தூக்கி கீழே எறிந்துவிட்டனா். இதனால், எனது நெஞ்சின் வலதுபுற எலும்பில் அடிபட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன்.
இதையறிந்த கட்சியின் பெரம்பலூா் மாவட்ட பொறுப்பாளா்கள் சிலா் என்னைச் சந்தித்து, கட்சி தலைமையிடம் பேசுவதாகக் கூறிய நிலையில், இதுவரை யாரும் என்னை நேரில் வந்து பாா்க்கவில்லை.
என்னை கட்சிக்கு எதிராக பேசாமல் தடுத்துவிட்டாா்களே தவிர, எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனவே, கட்சியின் தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.