பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி
நாய் கடித்து மாணவி காயம்
பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை நாய் கடித்ததில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் சிவாஜி தெருவைச் சோ்ந்தவா் முஹமது ஹாலித் மகள் ஹாலிஷா (6). இவா், அங்குள்ள பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை தனது தாயாருடன் பள்ளிக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த நெரு நாய் ஒன்று ஹாலிஷாவையும், அவரது தாயையும் துரத்திச்சென்று கடிக்க முயன்றது.
இதில் சிறுமி ஹாலிஷாவை நாய் கடித்து விட்டு ஓடிவிட்டது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.