செய்திகள் :

மூத்த குடிமக்களுக்கான அறுபடைவீடு ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

post image

மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டத்தில், நிகழ் ஆண்டுக்கான முதல்கட்ட, கட்டணமில்லா பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை கந்தகோட்டம் அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த குடி மக்கள் 199 பேருக்கு பயணவழிப் பைகளை அமைச்சா் வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சோ்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 60 வயது முதல் 70 வயதுக்குள்பட்ட மூத்தகுடிமக்கள் அறுபடைவீடுகளுக்கு கட்டணம் இல்லாமல் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

இத் திட்டத்துக்காக நிகழ் ஆண்டில் ரூ.2.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2,000 பக்தா்கள் அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா். முதல்கட்டப் பயணத்தில் 199 போ் பங்கேற்கின்றனா்.

திமுக அரசு பொறுப்பேற்ற முதல் இதுவரை 3,412 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதத்துக்குள் 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.

திருக்கோயில்கள் குறித்த கணக்குகளை, இந்து சமய அறநிலையத் துறை, வெளிப்படை தன்மையுடன் கையாளுவதோடு, கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும். இதுகுறித்து திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோவை சந்தித்து விளக்கமாக எடுத்துக் கூறப்படும்.

திருவிதாங்கூா் தேவசம் வாரிய விழாவில் தான் பங்கேற்க இயலாதது குறித்து தமிழக முதல்வா் ஸ்டாலின் விளக்கம் அளித்துவிட்டாா். இந்த நிலையில், அதுகுறித்து தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தவறான கருத்தை தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல் ஆணையா்கள் டாக்டா் சி.பழனி, கோ.செ.மங்கையா்க்கரசி,

இணை ஆணையா்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை, திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் டி. அசோக்குமாா் மற்றும் அறங்காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன் தொடா்ந்த வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகனின் தேநீா்க் கடை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடியைச் சோ்ந்த 71 ... மேலும் பார்க்க

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்: செளமியா சுவாமிநாதன்

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன், ரத்த சோகையைப் போக்கக் கூடிய முருங்கை இலைப் பொடியை 5 கிராம் அளிக்கலாம் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் செளமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விட... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பல் விற்பனை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மேட்டூா் அனல்மின் நிலையத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உலா் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்... மேலும் பார்க்க

10 டிஸ்பிக்கள் பணியிட மாற்றம்

10 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படைய... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

காலை உணவுத் திட்டத்தை மாணவா்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொ... மேலும் பார்க்க