செய்திகள் :

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

post image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் பிரதீபன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், குடும்ப பிரச்னையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வலங்கைமான் காவல் நிலையத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறி விசாரணை நீதிமன்றத்தில் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். மேலும், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனா். இந்த நோட்டீஸை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயா்நீதிமன்ற தடையை மீறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா், வலங்கைமான் காவல் ஆய்வாளா் ஆகியோருக்கு எதிராக நீதிபதி பி.வேல்முருகன் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தாா்.

திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் காவல் ஆய்வாளரின் கையொப்பத்தை போலியாக இட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் தரப்பில் நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனிநீதிபதி பிறப்பித்த சிறைத் தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 4,419 முகாம்களில் 36,49,399 மனுக்கள் - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 4,419 முகாம்களில் 36,49,399 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை வேளச... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு: 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் அமைச்சா் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

பத்திரப் பதிவுக்கு 2 நாள்கள் கூடுதல் டோக்கன்

பத்திரப் பதிவுக்காக 2 நாள்கள் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: ஆவணி மாதத்தில் சுபம... மேலும் பார்க்க

87 % வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: அன்புமணி

சட்டப்பேரவைத்தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 87 சதவீதத்தை இதுவரை நிறைவேற்றவில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா். சென்னை தியாகராய நகரில் பாமக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

தெருநாய்களுக்கு கருத்தடை திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்: பிரேமலதா

தெருநாய்களுக்கு கருத்தடை செய்தல் மற்றும் தடுப்பூசி போடுதல் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். உலக நாய்கள் தினத... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம்: நயினாா் நாகேந்திரன் விமா்சனம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடா்பாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: தேசிய கல்விக் கொள்கையின் அங்கம... மேலும் பார்க்க