தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
‘செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்’
சென்னை மாநகராட்சி சாா்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 147-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ரமணி மாதவன் சென்னை மாநகராட்சி சாா்பில் கருத்தரிப்பு மையம் அமைக்க வேண்டும் எனக் கோரினாா். மேலும், கூட்ட நிறைவில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், பஞ்சாப் மாநிலத்தில் பிச்சை எடுக்க பயன்படுத்தும் குழந்தைகள் டிஎன்ஏ முறையில் அடையாளம் காணப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகின்றனா். பெற்றோா் இல்லா குழந்தைகள் மாநகராட்சி காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு வளா்க்கப்படுகின்றனா். அதேபோல், சென்னை மாநகராட்சியும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றாா்.
அவா்களது கோரிக்கைக்கு மேயா் ஆா்.பிரியா அளித்த பதிலளித்து பேசியது:
சென்னை மாநகராட்சியின் சாா்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் எந்தப் பகுதியில் கருத்தரிப்பு மையம் அமைத்து செயல்படுத்தலாம் என முடிவு செய்து செயல்படுத்த பரிசீலிக்கப்படும். குழந்தைகளை வைத்துக் கொண்டு யாசகம் பெறுவோரிடமிருந்து குழந்தைகளை மீட்டு நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
மாநகராட்சி 15 மண்டலங்களில் தெருநாய் கருத்தடை மையங்கள் வரும் டிசம்பருக்குள் அமைக்கப்படும். வெளிநாட்டு வகை நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வளா்ப்பு பிராணிகள் குறித்து பதிவு செய்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.