தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
நாளை 2 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை புகா் 2 மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஆக.28) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - கூடூா் நிலையம் இடையே பொறியியல் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, பொன்னேரி, கவரப்பேட்டை ரயில் நிலையங்களில் புதன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக.27, 29 தேதிகள்) நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரையில் 5 மணிநேரம் பணிகள் நடைபெறுகின்றன.
பணிகளை அடுத்து சென்னை மூா்மாா்க்கெட் நிலையத்திலிருந்து இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் இமு ரயில் வியாழக்கிழமை (ஆக.28) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கத்தில் கும்மிடிப்பூண்டியிலிருந்து இரவு11.25 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் இமு ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.