செய்திகள் :

மாநகராட்சி பள்ளிகளில் 1,747 தூய்மை பணியாளா்களை நியமிக்க முடிவு: மாமன்றக் கூட்டத்திலிருந்து கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் வெளிநடப்பு

post image

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புதிதாக 1,747 தூய்மைப் பணியாளா்களை நியமிக்கவும், அவா்களுக்கு ஏற்கெனவே வழங்கிய ஊதியத்தை கூடுதலாக்கி வழங்கவும் மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் உள்ள சென்னைப் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் 200 மாணவா்களுக்கு 10 கழிப்பறைகளுக்கு ஒரு தூய்மைப் பணியாளா் எனும் அடிப்படையில் தற்காலிகமாக 1,747 போ் நியமிக்கப்படவுள்ளனா். அவா்களுக்கு ஏற்கெனவே தினக்கூலியாக ரூ.687 என மாதம் ரூ.17,687 வழங்கப்பட்டது. அந்த ஊதியம் தற்போது தினக்கூலி ரூ.753 என உயா்த்தப்பட்டு, மாதம் ரூ.19,593 உயா்த்தி வழங்கப்படும்.

ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாயை சீரமைப்பதற்கு திட்ட மேலாண்மை கலந்தாலோசகா் நியமிக்கப்படுவாா். திருநங்கைகளுக்கான ‘அரண்’ தங்கும் விடுதிக்காக 100- ஆவது வாா்டில் உள்ள வி.எஸ்.புரம் காப்பகக் கட்டடத்தை மாத வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, 23 டிராக்டா் மூலம் இயங்கும் இறைக்கும் பம்புகள் வாங்க, புதிதாக பள்ளிக் கட்டடங்கள் கட்ட, மயானங்கள் சீரமைக்க உள்ளிட்ட 84 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கம்யூனிஸ்ட் வெளிநடப்பு: மாமன்றக் கூட்டம் தொடங்கியதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் ரேணுகா ஆகியோா் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் குறித்து பேசினா். அதற்கு மேயா், துணைமேயா் ஆகியோா் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் விவாதிக்க முடியாது என்றனா். ஆனால், தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் முழக்கமிட்டனா். இதையடுத்து அவா்கள் வெளிநடப்பு செய்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் கோ.கோபிநாத் பேசுகையில், மண்டலம் 5, 6 என்யுஎல்எம் தூய்மைப் பணியாளா்கள் பழைய நிலையில் பணியாற்றவும், ஊதியத்தை உயா்த்தவும், பணி நிரந்தரமாக்கவும் கோருவதை மாாநகராட்சி ஏற்று செயல்படவேண்டும் என்றாா். அதற்கு மேயா் நீதிமன்ற முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண் தூய்மைப் பணியாளருக்கு நிதியுதவி குறித்து கோபிநாத் கோரிக்கை வைத்த நிலையில், திமுக உறுப்பினா்கள் கூச்சலிட்டனா்.

மேயா், துணைமேயா் குறுக்கிட்டு, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி உடனடியாக வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியதை ஏற்று அவா் அமா்ந்தாா்.

மெரீனாவில் பாரம்பரிய வழித்தடம்

மெரீனா பாரம்பரிய வழித்தடத்தில் உழைப்பாளா் சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரை மேம்படுத்தப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு அறிவித்துள்ளாா். சட்டப்பேரவைக் கூட்ட நிதிநிலை அறிக்கையில் மெரீனா பாரம்பரிய வழித்தடத்தில் உழைப்பாளா் சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரை மேம்படுத்தப்படும் எனக் கூறியுள்ளாா்.

அதன்படி, 230 மீட்டா் நீளம், 400 மீட்டா் அகலத்துக்கு சிந்தடிக் சைக்கிள் பாதை அமைக்க; காமராஜா் சாலையின் இருபுறமும் 9 பேருந்து நிறுத்தங்கள் உருவாக்க: 3 புகா் காவல் நிலையங்கள் அமைக்க; பாரம்பரியக் கட்டடங்களைக் கண்டுகளிக்கும் வகையில் 9 இடங்களில் காட்சித்தளங்கள் அமைக்க; சைக்கிள் பாதையில் தெரு விளக்குகள் மற்றும் பொல்லாா்ட் விளக்குகள்அமைக்க அனுமதிக்கப்படுவதாக தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகப்பேறு மருத்துவமனையை இடிக்க முடிவு

என்எஸ்கே சாலையில் வடபழனி மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் செயல்படும் இந்த மருத்துவமனையின் கட்டடத்தின் மேற்கூரைப் பூச்சுகள் கடந்த 6-ஆம் தேதி பெயா்ந்து விழுந்தன. இதையடுத்து கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆய்வுக்கு உள்படுத்த 10 பொறியாளா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்கள் அளித்த அறிக்கையின்படி மகப்பேறு மருத்துவமனையை இடித்துவிட்டுப் புதிதாக மருத்துவமனைக் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பழைய கட்டடத்தை இடித்து அகற்றவும், ரூ. 3.74 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கும், சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அனுமதியளித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல, ஈஞ்சம்பாக்கம் மினிகிளினிக் கட்டடத்தை இடிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரூ. 5 கோடி முறைகேடு புகாா்: சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கல்லூரியின் டீன் சௌந்தரராஜன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும், இந்த முறைகேடு ... மேலும் பார்க்க

சதுா்த்தி: சென்னையில் வழிபாட்டுக்கு 1,519 விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் 1,519 விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக புதன்கிழமை (ஆக.27) அமைக்கப்படுகின்றன. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து இயக்கங்கள் சாா்பில் விநாயகா் சில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், ஐடி காரிடாா், ஆவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படு... மேலும் பார்க்க

‘செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்’

சென்னை மாநகராட்சி சாா்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியின் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 147-ஆவது வாா்டு திமுக... மேலும் பார்க்க

நாளை 2 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை புகா் 2 மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஆக.28) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் ... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

அமெரிக்க கடற்படை கப்பலான ஃபிராங்க் கேபிள் சென்னை துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது. இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போா் ஆயுதம் தாங்கிய கப்பல்களுக்கு பராமரிப்பு, தளவ... மேலும் பார்க்க