எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு
பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு: 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் அமைச்சா் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தங்களை தொடா்புபடுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட நக்கீரன் உள்ளிட்ட 8 யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும். ரூ.1 கோடி மானநஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் பிரவீன் ஆகியோா் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.