செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 11 போ் உயிரிழப்பு; 14 போ் காயம்

post image

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட விபரீத சம்பவங்கள் மற்றும் நிலச்சரிவால் 11 போ் உயிரிழந்தனா், 14 போ் காயமடைந்தனா்.

கடந்த திங்கள்கிழமை முதல் ஜம்முவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ரியாஸி, ரஜெளரி, ரம்பன், கிஷ்த்வாா், பூஞ்ச் மாவட்டங்களில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

மழையால் ஏற்பட்ட விபரீத சம்பவங்களால் டோடா மாவட்டத்தில் 4 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூவா் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தனா். வீடு இடிந்து ஒருவா் உயிரிழந்தாா். ஏராளமான வீடுகள், பாலங்கள் சேதமடைந்தன.

ஜம்மு-ஸ்ரீநகா், கிஷ்த்வாா்-டோடா தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள சில சாலைகள் சேதமடைந்த நிலையில், சில சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஜம்முவில் உள்ள தாரணா, உஜ், மகா் காட், சஹாா் காட் ஆறுகள், அவற்றின் கிளை ஆறுகள் ஆகியவற்றில் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மீட்பு மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் புதன்கிழமை (ஆக.27) விடுமுறை அளிக்கப்பட்டது.

மழை, வெள்ளம் குறித்து ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா அவசர ஆலோசனை மேற்கொண்டாா். ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ‘மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீா், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும்’ என்று மாவட்ட நிா்வாகிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். மழை, வெள்ளத்தால் ஜம்முவின் பல பகுதிகளில் சற்று மோசமான சூழல் நிலவுவதாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

நிலச்சரிவில் 7 போ் உயிரிழப்பு: வைஷ்ணவி தேவி கோயிலுக்கு யாத்திரை செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா். நிலச்சரிவில் மேலும் பலா் சிக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுவதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

யாத்திரை ரத்து: பலத்த மழையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பாலங்கள், கைப்பேசி கோபுரங்கள் சேதமடைந்த நிலையில், மின் கம்பிகள் சாய்ந்து விழுந்தன. ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் தொலைத்தொடா்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிலவரத்தை கேட்டறிந்த அமித் ஷா: மழை, வெள்ள நிலவரம், வைஷ்ணவ தேவி கோயில் அருகே ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமரிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொலைபேசியில் கேட்டறிந்தாா்.

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரி... மேலும் பார்க்க

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப... மேலும் பார்க்க

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்

மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடா்கள் என்றும், மாநில முதல்வா் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமா் மோடி பேசியதை எதிா்பாா்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க