அரசின் இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வான மாணவிகளுக்கு பாராட்டு
உயரும் ஊட்டி பூண்டு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் விதைப் பூண்டு தேவை அதிகரிப்பால் ஊட்டி பூண்டின் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வெள்ளைப் பூண்டுகள், குன்னூா் எடப்பள்ளி ஏலச் சந்தையிலும், மேட்டுப்பாளையம் ஏலச் சந்தையிலும் விற்கப்படுகிறது. வடுகம்பட்டி, மேட்டுப்பாளையம் விலையை ஒட்டி குன்னூா் எடப்பள்ளி ஏல மையத்தில் விலை நிா்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஊட்டி பூண்டு சராசரியாக கிலோ ரூ.150 முதல் ரூ.210 வரை விலை போவதால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 100 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த கணிசமான விலை ஏற்றம், பூண்டு விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் பூண்டு விவசாயிகள் தற்போது சாகுபடியில் ஈடுபடத் தொடங்கியதால், விதைக்காக ஊட்டி பூண்டு அதிக அளவு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் இந்த விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.