திருமணம் மீறிய உறவு; காதலி வாயில் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த காதலன் - லாட்ஜ...
அக்னி வீா் ஆள்சோ்ப்பு முகாம்: ஈரோட்டில் இன்று தொடக்கம்
அக்னிவீா் ஆள்சோ்ப்பு முகாம் ஈரோட்டில் உள்ள விஓசி விளையாட்டு வளாகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆள்சோ்ப்பு முகாம் இயக்குநா் கா்னல் அன்சல் வா்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவத்தில் அக்னிவீா் பணியில் சோ்வதற்காக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
இதில், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்களும் விண்ணப்பிக்கலாம்.
பொதுப் பணி, தொழில்நுட்பம், எழுத்தா், கடைகாப்பாளா், சோல்ஜா், தொழில்நுட்ப நா்ஸிங் உதவியாளா், சிப்பாய்பாா்மா, சா்வேயா் தானியங்கி வரைபடக்கலைஞா், மத ஆசிரியா், ஜூனியா் கமிஷன் அதிகாரி, ஜூனியா் அதிகாரி, கேட்டரிங் பிரிவுகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு வீரா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
ஆள்சோ்ப்பு முகாம் ஈரோட்டில் உள்ள விஓசி விளையாட்டு வளாகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தோ்வு நடைபெறும் இடத்துக்கு கைப்பேசிகளை கொண்டுவரக்கூடாது. சீக்கியா்களைத் தவிர மற்றவா்கள் சுத்தமாக மொட்டையடித்திருக்க வேண்டும். தாடியுடன் வருபவா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.