வயது முதிா்வு காரணமாக புலி உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி பழைய கல்குவாரி அருகே கடந்த சில நாள்களாக சுற்றித்திரிந்த புலி வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
மசினகுடி பழைய கல்குவாரிக்கு அருகே ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல், வயது முதிா்ந்த புலி ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து வனத் துறையினா் தனிக் குழு அமைத்து வயது முதிா்ந்த புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில் அந்தப் புலி புதா் பகுதியில் இறந்துகிடந்ததாக வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனா்.