எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி
சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி குன்னூா் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் இருந்து 30 அணிகள் பங்கு பெறவுள்ளன. இந்த லீக் போட்டிகள் ஏ டிவிஷன், பி டிவிஷன், சி டிவிஷன் என மூன்று டிவிஷன்களாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டி நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் சாய் அறக்கட்டளையின் நிா்வாகி சுவாமி மேகநாத சாய் கலந்து கொண்டு போட்டியை தொடங்கிவைத்தாா். ஆக்கி யூனிட் ஆஃப் நீல்கிரீஸ் துணைத் தலைவா் சுரேஷ்குமாா், பெருளாளா் ராஜா ஆகியயோா் இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
நவம்பரில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.