குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்
ஓவேலி பகுதியில் உலவும் யானை: வனத் துறையினா் தீவிர கண்காணிப்பு
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வரும் காட்டு யானையை வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், ஓவேலி வனச் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக உலவி வரும் ஒற்றை யானை விளைநிலங்களுக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தோட்டத் தொழிலாளா்களையும் அச்சுறுத்தி வருகிறது.
புகாரின்பேரில், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு மேற்பாா்வையில் ஓவேலி வனச் சரக அலுவலா் வீரமணி தலைமையிலான வன ஊழியா்கள், அந்த யானையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
மேலும், யானையின் செயலைக் கட்டுப்படுத்த முதுமலை புலிகள் காப்பக வளா்ப்பு முகாமில் இருந்து விஜய், வாசிம் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்புப் பிறகு யானையைப் பிடிப்பது தொடா்பாக முடிவு எடுக்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.