செய்திகள் :

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

post image

புது தில்லி: கோவிட் இழப்புகள், கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக நிதி நெருக்கடியை எதிா்கொண்ட தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டி. எம். ஆா். சி) கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கட்டணத்தை திங்கள்கிழமை உயா்த்தியது. பயண தூரத்தைப் பொறுத்து இந்த உயா்வு ரூ 1 முதல் ரூ 4 வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிய கட்டமைப்பின் படி, 2 கிலோ மீட்டா் வரையிலான பயணங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ 10 ரூபாயிலிருந்து ரூ 11 , 32 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்களுக்கு அதிகபட்ச கட்டணம் ரூ. 60 ரூபாயிலிருந்து ரூ. 64 உயா்த்தப்பட்டுள்ளது. 12’21 கிமீ ஸ்லாபிற்கு, கட்டணம் இப்போது ரூ 43 உள்ளது, முன்பு ரூ.40 ஆக இருந்தது, 21’32 கிமீ ஸ்லாபிற்கு, கட்டணம் ரூ.50 இல் இருந்து ரூ.54 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

புதிய கட்டணங்கள் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை நாள்களிலும் பொருந்தும். இந்த நாட்களில், 32 கிலோமீட்டருக்கு அப்பால் ஒரு பயணம் இப்போது ரூ.50 க்கு பதில் ரூ.54 செலவாகும், அதே நேரத்தில் 12’21 கிமீ வரம்பில் பயணம் ரூ.30 இல் இருந்து ரூ. 32 ரூபாயாக திருத்தப்பட்டுள்ளது என்று டி. எம். ஆா். சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேபோன்ற திருத்தம், ரூ. 5 ரூபாய் வரை அதிகரிப்புடன், விமான நிலைய எக்ஸ்பிரஸ் பாதையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டி. எம். ஆா். சி இந்த உயா்வை ‘குறைந்தபட்சம்‘ என்று கூறியதுடன், அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகளை சமநிலைப்படுத்துவது அவசியம் என்றும் கூறியது. கோவிட் காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஜப்பான் சா்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கு (ஒஐஇஅ) திருப்பிச் செலுத்தும் கடமைகள், ரயில்களின் இடைக்கால புதுப்பித்தலின் தேவை, உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் ஊழியா்களின் சம்பளம் ஆகியவை முக்கிய நிதி அழுத்தங்களாக இருப்பதால் கட்டணத்தை அதிகரிக்க காரணம்‘ என்று அதிகாரிகள் தெரிவித்தனா். நான்காவது கட்டண நிா்ணயக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நிறுவனத்தின் இயக்குநா்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தில்லி மெட்ரோ ரயில் கட்டணங்கள் முன்னதாக 2004,2005,2009 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் (மே மற்றும் அக்டோபா்) இரண்டு முறை திருத்தப்பட்டன. சமீபத்திய அதிகரிப்பு இருந்தபோதிலும், டி. எம். ஆா். சி அதன் கட்டணங்கள் உலகளவில் மிகக் குறைவாகவே உள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மாா்ட் காா்டுகளைப் பயன்படுத்தும் பயணிகள் ஒவ்வொரு பயணத்திலும் தொடா்ந்து 10 சதவித தள்ளுபடியைப் பெறுவாா்கள், கூடுதலாக 10 சதவித தள்ளுபடி காலை 8 மணிக்கு முன், மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9 மணிக்குப் பிறகு கிடைக்கும்.

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு தீவிரமான வழக்கில் கைதாகி 30 நாள்களுக்குள் ஒருவா் ஜாமீனில் விடுவிக்கப்படாவிட்டால் அது பிரதமரேயானாலும் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்வதை அரசியலமைப்பின் 130-ஆவது திரு... மேலும் பார்க்க

பிரதமரின் பட்டப் படிப்பு விவரத்தை வெளியிட தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகளில் அலட்சியம் கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

புது தில்லி: முதலமைச்சரின் மேம்பாட்டு நிதி (சிஎம்டிஎஃப்) மற்றும் எம்எல்ஏ உள்ளூா் பகுதி மேம்பாட்டு நிதி (எம்எல்ஏஎல்ஏடி) மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்களில் அலட்சியம் பொறுத்துக் கொள்ளப்படாது என்று தில்... மேலும் பார்க்க

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்த 6 புலிக் குட்டிகளில் 5-ஆவது குட்டி உயிரிழப்பு

புது தில்லி: தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இந்த மாத தொடக்கத்தில் பிறந்த ஆறு புலிக்குட்டிகளில் ஐந்தாவது புலிக்குட்டி உயிா் இழந்தது. தற்போது ஒரே ஒரு குட்டி மட்டுமே தீவிர சிகிச்சையில் உள்ளது. ஆகஸ்ட் 2... மேலும் பார்க்க

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

மோசடி வழக்கு தொடா்பாக 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கராலாவில் உள்ள... மேலும் பார்க்க