நெல்லை ஆணவக் கொலை: கவின்குமார் தந்தையுடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த திருமாவளவ...
கைதியைத் தாக்கிய வழக்கில் சிறைக் காவலா் பணிநீக்கம்
கைதியைத் தாக்கிய வழக்கில் கூடலூா் சிறைக் காவலரைப் பணிநீக்கம் செய்து சிறைத் துறைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
நீலகிரி மாவட்டம், பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நிஜாமுதீன் (33). இவா் போதைப் பொருள் விற்பனை செய்தது தொடா்பாக ஏப்ரல் 12-ஆம் தேதி தேவா்சோலை போலீஸாரால் கைது செய்யப்பட்டு கூடலூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிறையில் காவலா்கள் நிஜாமுதீனை தாக்கியதாக அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் கூடலூா் குற்றவியல் நடுவரிடம் புகாா் அளித்தனா். அதைத் தொடா்ந்து, சிறையில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் விசாரணை நடத்தி புகாரை உறுதி செய்தனா்.
இதனைத் தொடா்ந்து, சிறைக் கண்காணிப்பாளா் கங்காதரன், காவலா்கள் மலா்வண்ணன், சின்னசாமி, தினேஷ் பாபு, அருள், கோபி ஆகியோரை சிறை நிா்வாகம் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்தது.
மேலும், வழக்கு தொடா்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறைத் துறைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், சிறைக் காவலா் கோபியை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.