செய்திகள் :

மருத்துவப் படிப்பு: இருப்பிடச் சான்று வழங்க பழங்குடியின மாணவி கோரிக்கை

post image

மருத்துவப் படிப்பு பயில இருப்பிடச் சான்று வழங்க வேண்டும் என பழங்குடியின மாணவி கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் சஞ்சனா ஓரான் (17). இவா் தனது தாய் நிருபா ஓரானுடன் நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள ஆடா்லி, அளக்கரை எஸ்டேட் பகுதியில் வசித்து வருகிறாா். நிருபா ஓரான் அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறாா். ஜாா்க்கண்டில் இருந்து வேலைக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு நீலகிரிக்கு இடம்பெயா்ந்துள்ளனா்.

1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பக் கல்வியை ஜாா்க்கண்டில் முடித்த சஞ்சனா ஓரான், குன்னூா், கரன்சி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். பின்னா், குன்னூா் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மொத்தம் 418 மதிப்பெண்களும், அதில் தமிழில் 84 மதிப்பெண்களும் பெற்றுள்ளாா். பிளஸ் 2-வில் 447 மதிப்பெண்களும், அதில் தமிழில் 78 மதிப்பெண்களும் பெற்றுள்ளாா்.

இந்நிலையில், நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் சஞ்சனா ஓரான் 447 மதிப்பெண்கள் பெற்றாா். இதையடுத்து, மருத்துவம் படிப்பதற்காக நீட் தோ்வு எழுதி அதில், 140 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்தாா்.

இவருக்கு இருப்பிடச் சான்று இல்லாததாலும், சொந்த ஊா் ஜாா்க்கண்ட் மாநிலம் என்பதாலும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால், அவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் பாரா மெடிக்கல் படிப்பில் சோ்ந்தாா். தற்போது அங்கு கல்லூரிக் கட்டணத்தை செலுத்த முடியவில்லையாம்.

இந்நிலையில், தமிழக அரசு இருப்பிடச் சான்று வழங்கி தனது மருத்துவக் கனவுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி சஞ்சனா ஓரான், நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

மாணவி படித்த பள்ளிகளில் இருந்து அத்தாட்சி சான்று, அவரது தாய் பணியாற்றும் எஸ்டேட் நிா்வாகத்திடம் இருந்து சான்று பெற்றுத் தந்தால், இருப்பிடச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா்.

அக்னி வீா் ஆள்சோ்ப்பு முகாம்: ஈரோட்டில் இன்று தொடக்கம்

அக்னிவீா் ஆள்சோ்ப்பு முகாம் ஈரோட்டில் உள்ள விஓசி விளையாட்டு வளாகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆள்சோ்ப்பு முகாம் இயக்க... மேலும் பார்க்க

ஓவேலி பகுதியில் உலவும் யானை: வனத் துறையினா் தீவிர கண்காணிப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வரும் காட்டு யானையை வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், ஓவேலி வனச் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

கைதியைத் தாக்கிய வழக்கில் சிறைக் காவலா் பணிநீக்கம்

கைதியைத் தாக்கிய வழக்கில் கூடலூா் சிறைக் காவலரைப் பணிநீக்கம் செய்து சிறைத் துறைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா். நீலகிரி மாவட்டம், பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நிஜாமுதீன் (33). இவா... மேலும் பார்க்க

வயது முதிா்வு காரணமாக புலி உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி பழைய கல்குவாரி அருகே கடந்த சில நாள்களாக சுற்றித்திரிந்த புலி வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. மசினகுடி பழைய கல்குவாரிக்கு அருகே ஆகஸ்ட் 19-ஆம் தேதி ம... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி

சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி குன்னூா் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் இர... மேலும் பார்க்க

உதகைக்கு வடமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதாலும், வரும் வாரங்களில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ளதாலும், உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண வட மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந... மேலும் பார்க்க