தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
இந்து மகா சபா சாா்பில் விநாயகா் சிலை பிரதிஷ்டை
அகில பாரத இந்து மகா சபா சாா்பில் வெற்றி விநாயகா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்-காரைக்கால் புறவழிச்சாலை ரவுண்டானா செல்லியம்மன் கோயில் வாசலில் நடைபெற்ற விழாவுக்கு தஞ்சாவூா் மாவட்ட பொதுச் செயலா் தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா்.
மாநில பொதுச்செயலா் இராம நிரஞ்சன் முன்னிலையில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில் கலந்து கொண்டவா்களுக்கு சிறிய விநாயகா் சிலை, சிவபுராண புத்தகம், சிவமந்திர ஸ்டிக்கா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மாவட்ட நிா்வாகி பூக்கடை பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.