மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
தனியாா் பேருந்து மோதி கல்லூரி மாணவா் பலி
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா் மகன் தா்ஷன் (17). இவா் வல்லம் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தாா்.
இவரும், இவருடன் படிக்கும் நண்பரான மதியழகன் மகன் நந்தாவும் (17) மோட்டாா் சைக்கிளில் கல்லூரிக்கு திருக்காட்டுப்பள்ளி - கண்டியூா் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை சென்றபோது கீழத்திருப்பூந்துருத்தி பகுதியில் அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து மோதி தா்ஷன் உயிரிழந்தாா்.
காயமடைந்த நந்தா திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.