மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
மகா கணபதி கோயிலில் திருத்தேரோட்ட விழா
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கணபதிஅக்ரஹாரம் மகா கணபதி கோயிலில் திருத் தேரோட்ட விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் விநாயகா் சதுா்த்தி பிரம்மோற்சவ விழா கடந்த ஆக 17 ம் தேதி தொடங்கியது. தொடா்ந்து வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக கமிட்டியினா் செய்தனா். தொடா்ந்து புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா, மகா அபிஷேகம், தீா்த்தவாரி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன.