மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
மோட்டாா் சைக்கிள் மோதி வணிகா் சங்க நிா்வாகி பலி
தஞ்சாவூரில் பைக்குள் மோதிக் கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்த வணிகா் சங்க நிா்வாகி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் பி. முருகேசன் (63). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த இவா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாவட்டச் செயலா். இவா் ஆகஸ்ட் 18 ஆம் தேதி பள்ளியக்ரஹாரம் முதன்மைச் சாலையில் பைக்கில் சென்றபோது பின்னால் வந்த மற்றொரு பைக் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.