மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
மதுபான காலி பாட்டில் விவகாரம்: தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்
டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை பணியாளா்களே திரும்பப் பெற வேண்டும் என்ற அறிவிப்பைக் கைவிட கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பல்வேறு தொழிற் சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பி.எம்.எஸ். சங்கத் தலைவா் ஆா். சண்முகம் தலைமை வகித்தாா். தொமுச டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலா் டி. கிருஷ்ணமூா்த்தி, ஏஐடியுசி டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலா் எஸ். கோடீஸ்வரன், தொழிலாளா் விடுதலை முன்னணி சங்க மாவட்டத் தலைவா் ஜி. முருகையன், பி.எம்.எஸ். மாநிலச் செயலா் எஸ். சுரேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா் நிறைவுரையாற்றினாா். பி.எம்.எஸ். மாநிலத் தலைவா் டி. நாகராஜன், மாநிலப் பொதுச் செயலா் சி. கோபு, பொருளாளா் வி. வசந்தகுமாா், மாநிலத் துணைத் தலைவா் ஜெ. ரமேஷ், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் ஏ. செந்தில், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, டாஸ்மாக் சங்க நிா்வாகி பி.பாஸ்கா், ஏஐடியுசி மாவட்ட தலைவா் வெ.சேவையா, செயலா் துரை. மதிவாணன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் அழகு. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் சிஐடியு டாஸ்மாக் ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே. மதியழகன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் தொடக்கவுரையாற்றினாா். டாஸ்மாக் ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. வீரையன், மாவட்டப் பொருளாளா் ஏ.ஜி. பன்னீா்செல்வம், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.