மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
தஞ்சாவூா் - பெங்களூருக்கு மீண்டும் பேருந்துச் சேவை
தஞ்சாவூா் - பெங்களூரு இடையே அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்து சேவை சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட தஞ்சாவூா் - பெங்களூரு பேருந்துச் சேவையை மீண்டும் தொடங்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதன்படி இப்பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, எம்எல்ஏக்கள் துரை, சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா். இதையடுத்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இப்பேருந்து தஞ்சாவூரிலிருந்து நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, சேலம், ஓசூா் வழியாக பெங்களூருக்கு மறுநாள் காலை 7 மணிக்கு சென்றடையும். இதேபோல, பெங்களூரிலிருந்து நாள்தோறும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, ஓசூா், சேலம், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு மறுநாள் காலை வந்தடையும் என விரைவு போக்குவரத்துக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.