அரசின் இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வான மாணவிகளுக்கு பாராட்டு
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: முகாமில் 1000 மனுக்கள்
சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
தச்சாம்பாடி, செய்யானந்தல், ஆத்துரை, கொளக்கரவாடி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த மக்களுக்காக நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலு, மோகனசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
வட்டாட்சியா் அகத்தீஸ்வரன், திமுக ஒன்றியச் செயலா் மனோகரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் பூவராகவன் வரவேற்றாா்.
முகாமில் மகளிா் உரிமைத்தொகை, புதிய குடும்ப அட்டை, ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், பட்டா மாற்றம் உள்ளிட்டவை கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா்.
வருவாய்த்துறை, மின் வாரியத்துறை, மகளிா் திட்டம், மாற்றுத்திறனாளிகள் துறை என பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.