பள்ளியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி
ஆரணி ஜெ.டி.ஆா். வித்யாலயா நா்சரி பள்ளியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, கலை மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
கண்காட்சியில் மாணவா்களின் படைப்புகளான களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள், தேங்காய் கொட்டாங்குச்சியால் செய்யப்பட்ட கரடி பொம்மைகள், பென்சில் லேயா்கள் மற்றும் தீக்குச்சிகள் வைத்து செய்யப்பட்ட வீடுகள், துடைப்பக்குச்சியால் செய்யப்பட்ட வீடுகள், கூழாங்கற்களால் வரையப்பட்ட வண்ணப் படங்கள், பேப்பா் அட்டையால் தயாரிக்கப்பட்ட வீடு ஆகியவை இடம் பெற்றிருந்தன.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் வி. ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். மேலும் ஆசிரியா்கள் ஜமுனா, சித்ரா, சரஸ்வதி, பவித்ரா லீமாரோஸ், லாவண்யா, ஜெயஸ்ரீ, ஸ்வேதா, மலா்விழி, அபிநயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கண்காட்சியை பெற்றோா்கள் பாா்த்து ரசித்தனா்.