தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் விநாயக சதுா்த்தி
ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா். நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் விநாயக சதுா்த்தி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஏசிஎஸ் கல்விக் குழும நிறுவனங்களின் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். பல்கலைக்கழக முதன்மையா் ஸ்டாலின் வரவேற்றாா். இணைப் பதிவாளா்கள் பெருவழுதி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட விநியாகா் சிலைக்கு சிறப்பு பூஜை செய்தனா்.
பிசியோதெரபி துறைத் தலைவா் சுதாகா் மற்றும் பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
வழிபாடுகளுக்குப் பிறகு பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் ஆன்மிகச் சூழலை உருவாக்கி, அனைவருக்கும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதாக பல்கலைக்கழக முதன்மையா் தெரிவித்தாா்.