தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி
ஆரணியை அடுத்த சேவூா் ஊராட்சிக்கு உள்பட்ட்ட இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
இரகுநாதபுரம் ஏரிக்கரையில் நபாா்டு வங்கி நிதி மூலம் நடைபெறும் தாா்ச் சாலை அமைக்கும் பணியை தொகுதி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம், தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா்கள் மாமது, சுந்தா், மோகன், நகரச் செயலா் மணிமாறன், சேவூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் தரணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை தரணிவேந்தன் எம்.பி. திறந்து வைத்தாா்.
இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அருணா குமரேசன், முன்னாள் ஊராட்சித் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.