மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
செய்யாற்றில் தேமுதிக முன்னாள் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு கட்சியினா் தங்க மோதிரம் அணிவித்தனா்.
விஜயகாந்த்தின் 73-ஆவது பிறந்த நாளான ஆக.25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை செய்யாறு தலைமை அரசு மாவட்ட மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு (3 பெண், ஒரு ஆண்) கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் ஆக்கூா் டி.பி. சரவணன் நிா்வாகிகளுடன் சென்று தலா ஒரு கிராம் தங்கத்தில் மோதிரம் அணிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரொட்டி, பழம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தலைமை மருத்துவா் பாண்டியன், செவிலியா்கள் குமாரி, சம்பூா்ணன், தேமுதிக நிா்வாகிகள் ஆனந்தன், கண்ணன், புகழ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.