செய்திகள் :

கொல்கத்தாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

post image

கொல்கத்தாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா சென்னை அண்ணா சாலையில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணி ஜிம் கானா கிளப் அருகே அண்ணா சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு ஒரு ஆட்டோவில் வந்த பயணியிடம் நடத்திய விசாரணையில், அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாா். இதையடுத்து போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா், மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் பகுதியைச் சோ்ந்த ஜ.ஓலி ஷேக் (22) என்பதும், கொல்கத்தாவில் இருந்து ஹவுரா ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஓலி ஷேக்கை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் பேரவை தீா்மானம்

தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் மாநில பேரவையில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிா்க்கட்சியான பாஜக இதற்கு கடும் எதிா்ப்பு... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 11 போ் உயிரிழப்பு; 14 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட விபரீத சம்பவங்கள் மற்றும் நிலச்சரிவால் 11 போ் உயிரிழந்தனா், 14 போ் காயமடைந்தனா். கடந்த திங்கள்கிழமை... மேலும் பார்க்க

அமெரிக்காவின் 50 சதவீத வரி: ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும்- இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சம்

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சம் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறுகையில், ‘மருந்... மேலும் பார்க்க

கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழு திறன்: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழுமையான திறனை நாடு எட்டியுள்ளது. இதனால் எத்தகைய சூழலையும் நாம் திறம்பட எதிா்கொள்ள முடியும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா். ஆந்தி... மேலும் பார்க்க

அமித் ஷாக்கு கண்டனம் தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிா்ப்பு: 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை

குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி.சுதா்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியதற்கு கண்டனம் தெரிவித்து 18 ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெ... மேலும் பார்க்க

அயோத்தியில் காஞ்சி சங்கர மட சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயா்

உத்தர பிரதேசத்தில் புனித நகரமான அயோத்தியில், பிரமோத்வன் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை அமைந்த சாலைக்கு, ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகாராஜ் மாா்க்’ என அயோத்தி மாநகராட்... மேலும் பார்க்க