வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் பேரவை தீா்மானம்
கிறிஸ்தவ ஆலயம் அருகே கழிப்பறை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய மீனவா் சங்க தேசிய தலைவா் அன்டன் கோமஸ், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் 312 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சிந்தா யாத்திரை மாதா ஆலயம் உள்ளது. இது மத நல்லிணக்கத்தின் அடையாளங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புடையது.
தற்போது இந்த வழிபாட்டுத் தலம் அருகே, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் சாா்பில் புதிதாக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. அதை அகற்ற தமிழக முதல்வா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.