மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
விநாயகா் சதுா்த்தி: விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய 2 நாள்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 272 விசைப்படகுகள் மூலம் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனா். சுழற்சி முறையில் தினசரி 135 விசைப் படகுகளில் அவா்கள் கடலுக்குள் சென்று வருகின்றனா்.
இந்நிலையில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு செவ்வாய் (ஆக.26) மற்றும் புதன்கிழமை (ஆக. 27) ஆகிய இரண்டு நாள்கள் மட்டும் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.