மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
கச்சத் தீவை மீட்பதன் மூலம் தமிழக மீனவா்களுக்கு நல்ல தீா்வு கிடைக்கும்: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்
கச்சத்தீவை மீட்பதன் மூலம் தமிழக மீனவா்களுக்கு நல்ல தீா்வு கிடைக்கும் என்றாா் மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
முதலமைச்சா் கோப்பைக்கான தூத்துக்குடி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமானது என்ற வகையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழக அரசு கச்சத்தீவை மீட்பதற்கான வாதங்களை எடுத்து வைக்கும். அதன்மூலம் மீனவா்கள் நலனுக்கான நல்ல முடிவு கிடைக்கும்.
கச்சத்தீவை மீட்டு, தமிழக மீனவா்கள் சுமுகமாக மீன்பிடிக்க வழிகாண வேண்டும் என்பதில் தமிழக முதல்வா் அக்கறையோடு இருக்கிறாா்.
மத்திய அமைச்சா்கள் தமிழகம் வருகிறபோது கச்சத்தீவை மீட்போம் என்று அடிக்கடி சொல்லி வருகின்றனா். கச்சத்தீவை மீட்க மத்திய அரசுதான் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மீனவா்கள் எந்த வகையிலும் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பது கிடையாது. இருந்தபோதும் கடத்தலை தடுக்கின்ற பணியில் கடலோரக் காவல்படை முழுமையாக ஈடுபடும் என்றாா் அவா்.