மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
தூத்துக்குடி கடையில் 37 பவுன் தங்கக் கட்டி திருட்டு: ஊழியா் கைது
தூத்துக்குடியில் உள்ள நகை பரிசோதனைக் கடையில் 37.3 சவரன் தங்கக் கட்டியைத் திருடியதாக ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, டபிள்யூஜிசி சாலையில் நகை பரிசோதனை (டெஸ்டிங்) கடை நடத்தி வருபவா் கேசவன் மகன் விகாஸ் சிண்டே (46). இவரது கடையில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த பாபு சித்திக் மகன் விட்டல் ஷிங்கதே (29) பணியாற்றி வந்தாா்.
இவா், கடையிலிருந்த ரூ. 29.80 லட்சம் மதிப்பிலான 37.3 சவரன் தங்கக் கட்டியைத் திருடிவிட்டு தப்பிச் சென்றாராம். புகாரின்பேரில், மத்தியபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
அவா் திங்கள்கிழமை திருநெல்வேலியிலிருந்து மும்பை செல்லும் தாதா் எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிச்செல்வதாக மத்திய பாகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவா்கள் சேலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இந்நிலையில், சேலம் நிலையத்துக்கு வந்த தாதா் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீஸாா் சோதனை மேற்கொண்டு, அதில் பயணித்த விட்டல் ஷிங்கதேவை பிடித்து தூத்துக்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, தங்கக் கட்டியைப் பறிமுதல் செய்தனா்.