மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
தூத்துக்குடியில் ரூ. 75 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடலோர காவல் படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடியில் கடலோரக் காவல் படை ஆய்வாளா் பேச்சிமுத்து உத்தரவின்பேரில், வேம்பாா் சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் உரிய ஆவணங்கள் இன்றி 32 மூட்டைகளில் மான்செஸ்டா் யுனைடெட் கிங்டம் என்ற வெளிநாட்டு நிறுவன சிகரெட்டுகள் மொத்தம் 6,40,000 இருந்தன. இதன் மதிப்பு ரூ. 75 லட்சமாகும். இதையடுத்து, சிகரெட்டு மூட்டையுடன் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சோ்ந்த ராஜேஷை (52) கைதுசெய்தனா்.