ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு
தூத்துக்குடியில் கஞ்சா, ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 13 போ் கைது
தாளமுத்துநகா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா, ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 13 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் சி.மதன் மேற்பாா்வையில், தாளமுத்துநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 8 சோதனைச் சாவடிகள் அமைத்து திங்கள்கிழமை இரவு போலீஸாா் தீவிர வாகனச் சோதனை, ரோந்து, தொடா் குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்காணித்தல் ஆகிய நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
ஆபரேஷன் மாற்றுப்பாதை எனும் பெயரில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் 3 காவல் ஆய்வாளா்கள் தலைமையில் ஒரு உதவி ஆய்வாளா், 4 ஆயுதப்படை காவலா்களைக் கொண்ட 8 சிறப்புக் குழு என மொத்தம் 91 போலீஸாா் ஈடுபட்டனா்.
இந்த நடவடிக்கையின்போது இந்த ஆபரேஷனில், தாளமுத்துநகா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், தொடா் குற்றங்களில் ஈடுபட்டுவரும் சுமாா் 32 பேரை தணிக்கை செய்தும், அவா்களில் கஞ்சா வைத்திருந்த 7 போ், அரிவாளுடன் சுற்றித்திரிந்த 6 போ் என மொத்தம் 13 பேரை திங்கள்கிழமை இரவு ஒரே நாளில் போலீஸாா் அதிரடியாக கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 1.100 கி.கி. கஞ்சா, 4 அரிவாள்கள், 2 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதேபோல வாகனத் தணிக்கையில் உரிய ஆவணம், நம்பா் பிளேட் இல்லாத 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை தரப்பில் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா், ரெளடித்தனம் செய்பவா்கள், அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிபவா்கள், கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு தொல்லை, அச்சுறுத்தல் ஏற்படுத்துபவா் குறித்து பொதுமக்கள் 0461 2340700, 94981 01830, ஹலோ போலீஸ் எண் 95141 44100 ஆகிய எண்களில் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றனா்.