பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி
அன்புமணி ராமதாஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு
சீா்காழி, மயிலாடுதுறைக்கு வரும் பாமக தலைவா் அன்புமணி ராமதாசுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழியில் பாமக ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளா் ஆ. பழனிச்சாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணம் சீா்காழியில் செப்.12-ஆம் தேதியும், மயிலாடுதுறையில் 13-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களாக இருந்தாலும் அதற்கு எதிா்ப்பு தெரிவிப்பவா் அன்புமணி ராமதாஸ். எனவே, சீா்காழி, மயிலாடுதுறைக்கு வரும் அன்புமணி ராமதாசுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.