கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேற்றம்: டாப் 2-இல் கில், ரோஹித் நீடிப்பு!
முதல்முறையாக ஆஸ்கருக்கு தேர்வான பப்புவா நியூ கினிய திரைப்படம்! பா.இரஞ்சித் தயாரிப்பு!
பப்புவா நியூ கினியா நாட்டிலிருந்து முதல்முறையாக ஒரு திரைப்படம் ஆஸ்கருக்குத் தேர்வாகியுள்ளது.
இந்தப் படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. இரஞ்சித் இணைத் தயாரிப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் ஆஸ்கர் விருதுகென்று தனி மரியாதை உருவாகியிருக்கிறது.
டாக்டர். பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் பாபா புகா (papa puka) எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை அக்ஷய் குமார் பரஜியா, பா.இரஞ்சித், பிரகாஷ் பாரே, நோலீன் டௌலா வுனம் ஆகியோர் தயாரித்துள்ளார்கள்.
பப்புவா நியூ கினியா நாட்டிலிருந்து முதல்முறையாக 98-ஆவது ஆஸ்கருக்கு இந்தப் படம் தேர்வாகியுள்ளதால் மிகுந்த ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.
Historic Milestone for PNG Cinema#PapaBuka, directed by Dr. Bijukumar Damodaran and produced by Noelene Taula Wunum, Akshay Kumar Parija, Pa. Ranjith, and Prakash Bare, has been chosen as the country’s first-ever official entry to the 98th Academy Awards (2026) pic.twitter.com/qrXrE9yOKZ
— Neelam Productions (@officialneelam) August 27, 2025