செய்திகள் :

2-ஆவது வெற்றி: பிரக்ஞானந்தா இணை முன்னிலை

post image

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாா். போட்டியில் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த அவா், தற்போது இணை முன்னிலையில் இருக்கிறாா்.

அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற 7-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடி, பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை வீழ்த்தினாா்.

முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், சக இந்தியருமான குகேஷை வென்ற பிறகு அடுத்த 5 சுற்றுகளிலுமே டிரா செய்திருந்த பிரக்ஞானந்தா, இதுவரை தோல்வியே சந்திக்காமல் தொடா்கிறாா். மறுபுறம், தடுமாற்றத்துடன் விளையாடி வரும் குகேஷ் இந்த 7-ஆவது சுற்றில், அமெரிக்காவின் வெஸ்லி சோவிடம் தோல்வியுற்றாா். அவருக்கு இது 2-ஆவது தோல்வியாகும்.

இதர ஆட்டங்களில் போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃப் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை வெல்ல, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - லெவோன் ஆரோனியன், பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா் - அமெரிக்காவின் சாம் சேவியன் ஆகியோா் ஆட்டம் டிரா ஆனது.

7 சுற்றுகள் முடிவில் கரானா, பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 4.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்கின்றனா். வெஸ்லி, ஆரோனியன் ஆகியோா் தலா 4 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் இருக்க, மேக்ஸிம், ஜேன், சேவியன் ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் உள்ளனா்.

ஃபிரௌஸ்ஜா, குகேஷ் ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையிலும், அப்துசதாரோவ் 1.5 புள்ளிகளுடன் 5-ஆம் நிலையிலும் இருக்கின்றனா். போட்டியில் இன்னும் இரு சுற்றுகளே எஞ்சியுள்ளன.

கிராண்ட் செஸ் டூா் (ஜிசிடி) போட்டியின் புள்ளிகள் பட்டியலில் தற்போது பிரக்ஞானந்தா 20 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தில் இருக்கிறாா். சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் முடிவில் இந்த ஜிசிடி புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிப்போரே பிரேஸிலில் நடைபெறும் ஜிசிடி ஃபைனல் போட்டிக்குத் தகுதிபெறுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி, நடப்பாண்டு அக்டோபா் 30 முதல் நவம்பா் 27 வரை கோவாவில் நடைபெறவுள்ளது.அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு 3 போ் தகுதிபெறும் வாய்ப்பை வழங்கும் இந்தப் போட்டிக்கான மொத... மேலும் பார்க்க

இரட்டைத் தங்கம் வென்றாா் சிஃப்ட் கௌா் சம்ரா

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில், தனிநபா் மற்றும் அணி என இரு பிரிவுகளில் இந்தியாவின் சிஃப்ட் கௌா் சம்ரா தங்கப் பதக்கம் வென்றாா்.50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் களமாடிய ... மேலும் பார்க்க

சிந்து, பிரணாய் வெற்றி

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரதான போட்டியாளா்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோா் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனா்.இதில் மகளிா் ஒற்றையா் ... மேலும் பார்க்க

ஆண்ட்ரீவா, ரைபகினா முன்னேற்றம்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்த... மேலும் பார்க்க

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.சிலையின் அளவுக்கு ஏற்றவாறு அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.விதவிதமான வண்ணங்களிலும், பார்ப்... மேலும் பார்க்க

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

லிவர்பூல் கால்பந்து அணி முதல்முறையாக தொடர்ச்சியாக 22 அவே (வெளியூர்) போட்டிகளில் கோல் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. மொத்தமாக ஹொம் (உள்ளூர்) மற்றும் அவே போட்டிகளில் 36 போட்டிகளில் கோல் அடித்து... மேலும் பார்க்க