செய்திகள் :

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

post image

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய வலிமை உள்ள சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் சுதா்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தாா். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பி.,க்களிடம் ஆதரவு திரட்டினாா்.

இதில், விசக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பேசுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய வலிமை உள்ள ஒருவரை குடியரசுத் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவே, அகில இந்திய அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

திமுக எம்.பி.க்கள் தவறாமல் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: கனிமொழி

VKC leader Thol Thirumavalan says people should vote for Sudarshan Reddy, who has the strength to protect the Indian Constitution.

நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என சென்னை நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமன... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்கள் தவறாமல் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: கனிமொழி

சென்னை: குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் திமுக எம்.பி.,க்களும் அனைவரும் தவறாமல் வருகை தந்து நீதியரசர் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டுமென திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி அறிவுறுத்தினாா்.... மேலும் பார்க்க

அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன்: சுதர்சன் ரெட்டி

சென்னை: குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தால், அரசியலமைப்பை பாதுகாக்க முழுமூச்சுடன் செயல்படுவேன் என்று ‘இந்தியா’கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி உறுதி அளித்தாா்.செ... மேலும் பார்க்க

அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய பாஜக அரசு அரசியல் எதிரிகளை பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில், இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் கா... மேலும் பார்க்க

ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்காது என தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு, கடந்த... மேலும் பார்க்க

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி

புதுக்கோட்டை: வீட்டின் அருகே மின் கம்பத்தின் ஸ்டே கம்பியில் மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8 ஆம் வகுப்பு மாணவன் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க