மதராஸி: "விஜய் சார் அப்படி நினைச்சிருந்தா துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார்; அஜித் சார்..." - SK
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி' படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், "விஜய் சார்கூட நான் நடிச்சதுக்குப் பிறகு எல்லோருக்கும் சந்தோஷம். சிலர், இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் பண்ணாங்க.
அண்ணன் அண்ணன்தான் தம்பி தம்பிதான். அவர் அப்படி நினைச்சிருந்தா துப்பாக்கி கொடுத்திருக்க மாட்டார். நானும் அப்படி நினைச்சிருந்தா துப்பாக்கி வாங்கியிருக்கமாட்டேன்.
நான் அவருடைய ரசிகர்களை பிடிக்க பார்க்கிறேன்னு சொன்னாங்க. ரசிகர்களை அப்படி பிடிக்க முடியாது.
அஜித் சார் மன்றத்தை களைச்சு ரொம்ப நாள் ஆச்சு, இன்னும் அவர் பின்னாடி ரசிகர்கள் இருக்காங்க.
அதே மாதிரி, ரஜினி சார், சிம்பு சார், தனுஷ் சார்னு பலருக்கும் ரசிகர்கள் இருக்காங்க. ரசிகர்களை சாம்பாதிக்கணும். நான் இப்போது சாம்பாதிக்க ஸ்டார்ட் பணியிருக்கேன்.
நீங்க நல்லா இருக்கணும், உங்க குடும்பம் நல்லா இருக்கணும். விமர்சனம் எல்லோருக்கும் வரும், ஒரு வருஷம் ஐ.பி.எல் நல்லா இல்லன்னு தோனியை விமர்சனம் பண்ணாங்க.
சி.எஸ்.கே கிட்ட 5 கப் இருக்கு. நம்மை திருத்திக்க விமர்சனம் சொன்னால் எடுத்துக்கோங்க. சோசியல் மீடியவுல ஆயிரம் சொல்வாங்க." என்று கூறினார்.
தொடர்ந்து அமரன் படம் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், "அமரன் படத்தை டிவில பார்த்துட்டு ஒரு வயதான அம்மா என்னை பார்க்க வந்தாங்க.
`உங்கள அப்படி பார்த்ததும் எங்களுக்கு தூக்கம் வரலன்னு' சொல்லி கையைத் தொட்டு பார்த்தாங்க.
பிறகு அந்த அம்மாவோட ஹோம்ல இருக்கிறவங்க, `இந்த மாதிரி க்ளைமேக்ஸ் பண்ணாதீங்கன்னு' சொன்னாங்க. நம்ம வீட்டு பிள்ளைங்கிறது வெறும் டைட்டில் மட்டும் கிடையாது" என்றார்.