Madharaasi: "முருகதாஸ் சார் படத்துல நடிக்கணும்னு சொன்னப்போ கலாய்ச்சாங்க" - சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி' படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், "நான் விழும்போது கைதந்து, எழும்போது உடன் நின்ற என் ரசிகர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
நான் 14 வருஷம் ஒரு பிளாஷ்பேக் போயிட்டு வர்றேன். அப்போ எனக்கு எழாம் அறிவு படத்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கூப்பிட்டாங்க.
பிறகு ஒரு ஹீரோவை வச்சு போய்டலாம்னு முடிவு பண்ணிட்டாங்கனு சொன்னாங்க. அந்த நிகழ்வை ஜெய் அண்ணன் தொகுத்து வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குற வாய்ப்பு கிடைச்சிருந்தா, முருகதாஸ் சார் முன்னாடி எதாவது பண்ணி வாய்ப்பு வாங்கிடலாம்னு நினச்சேன்.
அப்புறம் அவருடைய தயாரிப்புல எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த படத்தோட விழாவுல முருகதாஸ் சார், ஷங்கர் சார் படத்துல நடிக்கணும்னு சொல்லியிருந்தேன். அப்போ எல்லோரும் என்னை கலாய்ச்சாங்க.
தொடர்ந்து உழைச்சா மேல வரலாம்னு நினைச்சு உழைச்சு இன்னைக்கு முருகதாஸ் சார் இயக்கத்துல நடிச்சு இங்க நிக்குறேன்.
கஜினி படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் நான் அடுத்த நாள்தான் படத்தை பார்த்தேன்.

அப்பாவுக்கு ரமணா படம் ரொம்ப பிடிக்கும். அப்பா இன்னைக்கு இருந்திருந்தால் கண்டிப்பா சந்தோசப்பட்டிருப்பாரு.
இந்த படத்துல ஷாருக்கான் நடிக்க வேண்டியதுனு சார் சொன்னாங்க. அதுல எஸ்.கே நடிச்சதே பெரிய விஷயம்.
நான் 10-வது படிக்கும்போது சாரோட முதல் படம் ரிலீஸ் ஆனது. இன்னைக்கு என் பொண்ணு 7-வது படிக்கிறாங்க.
எனக்கு துப்பாக்கி எவ்வளவு பிடிக்கும் நான் சொல்லியிருக்கேன். அப்போ நான் ஒரு ட்வீட் போட்ருப்பேன்.
இன்னைக்கு பார்த்தா ஒரு பக்கம் துப்பாக்கி டைரக்டர், இன்னொரு பக்கம் துப்பாக்கி வில்லன். இடையில, அவர்கூட நான் நடிச்சேன்.
இந்த படத்தோட ஷூட்டிங்ல கேமராமேனுக்கு விரல் கட் ஆகிடுச்சுனு முருகதாஸ் சார் சொல்லியிருந்தார்.
நான் ஹாஸ்பிடல்ல அவரைப் பார்க்கும்போது ரொம்ப சாதாரணமாக விரல் கட் ஆகிடுச்சுனு சொன்னாரு.
அவர் ஒரு தம் அடிச்சுட்டு வந்தார்னா கேமிராவை வச்சு சிவதாண்டவம் ஆடுவாரு.

ஒரு குரலை ஒரு காட்சிக்கு எப்படி பயன்படுத்தணும்னு, அய்யப்பனும் கோஷியும் படத்துல பிஜு மேனன் சார் கிட்ட நான் காத்துக்கிட்டேன்.
லவ்ங்கிறது தியாகராஜ பாகவதர் காலத்துல இருந்து அனிருத் காலம் வரைக்கும் இருக்கிற எவர்கிரீன்.
இப்போது ஜென் சி (gen z) பண்றதெல்லாம் காதலானு கேட்கிறாங்க. உண்மையான காதலாக இருந்தால் உயிரைக்கூட கொடுப்பாங்க, அதுதான் காதல்.
அப்டி மாலதிங்கிற பொண்ணுக்கு ரகுங்கிற பையன் கொடுக்கிற உண்மையான காதலைப் பார்ப்பீங்க" என்று கூறினார்.